கேரள அரசுக்கு தானம்; 13.5 சென்ட் நிலத்தை வழங்கிய அடூர் கோபாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம்: கேரள அரசு லைஃப் மிஷன் என்ற பெயரில் ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கேரளா முழுவதும் பல லட்சம் பேர் இலவச வீடுகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் கூடுதல் நிலம் உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு இலவசமாக நிலம் வழங்கலாம் என்று சமீபத்தில் அரசு அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் இந்தத் திட்டத்திற்காக தங்களது நிலங்களை அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தன்னுடைய 13.5 சென்ட் நிலத்தை இந்த திட்டத்திற்கு இலவசமாக வழங்கியுள்ளார். இவருக்கு பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் அருகே உள்ள ஏரத்து என்ற பகுதியில் 13.5 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்திற்கு தான் இலவசமாக வழங்குவதாக அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  இதுபற்றி அறிந்ததும் கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் கோவிந்தன் திருவனந்தபுரத்திலுள்ள அடூர் கோபாலகிருஷ்ணனின்வீட்டுக்கு சென்று நன்றி தெரிவித்தார்.

Related Stories: