தொமுச திட்ட செயற்குழு கூட்டம்

திருவள்ளூர்: காஞ்சி மின் பகிர்மான வட்ட தொமுசவின் திட்ட செயற்குழு மற்றும் திருவள்ளூர் கோட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவள்ளூர் பெருமாள் செட்டித்தெருவில் உள்ள எஸ்டிபி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. திட்டத் தலைவர் சிட்டா வாசு தலைமை வகித்தார். இதில் சங்க வளர்ச்சி மற்றும் புதிய கிளைநிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யயப்பட்டனர். கூட்டத்தில் தருமன், துரைசாமி, கோவிந்தசாமி, வெங்கடேசன், சரவணன், ரகு, முனிவேல், கோயிகிருஷ்னன், தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துரைமுருகன் நன்றி கூறினார். 

Related Stories: