கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 19 பேர் விண்ணப்பம் பெற்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 8,925, பெண் வாக்காளர்கள் 8,688, இதர வாக்காளர் 3 பேர் என மொத்தம் 1,7616 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டுகளில் நீண்டநாட்களாக வார்டு உறுப்பினர் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாமல் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 19 வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலர் யமுனா வழங்கினார்.

Related Stories: