உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்: கலெக்டர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளுடன்  உள்ளன. இங்கு முதல்முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையர் நாராயணன், உதவி தேர்தல் அலுவலர்கள் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யும் அறை, மாநகராட்சி அலுவலகம் முழுவதும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடித்து, போலீசாரின் சோதனைக்கு பின்னர், வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்யும் அறைகள், சிசிடிவி கட்டுபாட்டு அறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நாராயணன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: