ஜார்கண்டில் நக்சல்கள் கைவரிசை ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்ப்பு

கிரிதிக்: ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் சிசாகி மற்றும் சவுதரிபந்த் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் சேதமடைந்தது. உடனடியாக அங்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்தனர். தண்டவாளத்தை சரிசெய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது. நள்ளிரவு 12.30மணி முதல் காலை 6.30 மணி வரை ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதையில்  இயக்கப்பட்டன. குண்டு  வெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநில போலீசார் கூறுகையில், ‘ தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் பிரசாந்த் போஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன். எனவே,, நக்சலைட்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது,’ என தெரிவித்துள்ளனர். 

Related Stories: