தேசிய கொடியை ஏற்றிய நேரத்தில் சோபியானில் 3 வீரர்கள் காயம்; தீவிரவாதிகள் சுற்றிவளைப்பு

சோபியான்: சோபியானில் தேசிய கொடியை ஏற்றிய நேரத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 3 வீரர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஷோபியான் மாவட்டம் செக் நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு ​​​​படையினர் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி ஷோபியானில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் சார்பில், தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு தெற்கு காஷ்மீர் வரலாற்றில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியது’ என்றனர்.

Related Stories: