அரியலூர் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக சைல்டு லைன் உறுப்பினர் தகவல்...!!

அரியலூர்: அரியலூர் மாணவியின் தற்கொலை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக ஏற்கெனவே தொலைபேசியில் புகார் வந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தஞ்சை தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி விடுதி காப்பாளர் மீது புகார் கூறப்படுகிறது. மேலும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் மாணவிக்கு சித்தி கொடுமை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் சித்தி கொடுமை என சைல்டு லைன் எண்ணுக்கு மாணவியிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், விசாரணைக்கு சென்ற போது சித்தி கொடுமை இல்லை என மாணவி மறுத்ததாகவும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இருப்பினும் மாணவி மற்றும் சித்தி இருவருக்கும் சைல்டு லைன் உறுப்பினர் கவுன்சிலிங் கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மாணவியிடம் அப்போது விசாரணை நடத்திய திருமானூர் சைல்டு லைன் குழு உறுப்பினர் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்திருக்கிறார்.

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்த சீலிடப்பட்ட அறிக்கை ஒப்படைக்கப்படும் என அரியலூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவி பேசியதாக வெளியான விடீயோவின் மற்றொரு பகுதி தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் பள்ளி விடுதிக்காப்பாளரை குற்றம்சாட்டுவதாக உள்ளது. சித்தி கொடுமை புகார் தொடர்பாக சைல்டு லைன் குழு உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.   

Related Stories: