அரசு போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து 5வது விருது பெற்ற உத்திரமேரூர் பணிமனை

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், 6 மண்டலத்தில், 55 பணிமனைகள் உள்ளன. இதில், முறையான பராமரிப்பு, தடத்தில் உள்ள அனைத்து பஸ்களையும் இயக்குதல் உள்பட பல்வேறு செயல்களுக்காக ஒரு பணிமனையை தேர்வு செய்து, குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவில், சிறந்த கிளை மேலாளருக்கு நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனைக்கு பணித்திறன் நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மண்டல பொது மேலாளர் அர்ஜூனன், உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் கருணாகரனுக்கு, விருது மற்றும் பணித்திறன் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

உத்திரமேரூர் பணிமனைக்கு, கடந்த 2019, லோக்சபா தேர்தலன்று, மாநிலத்தில், 130 சதவீதம் பஸ்களை இயக்கியதற்காக விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு, 365 நாட்களும் பஸ்களை இயக்கியதற்காக 2வது விருது, 2020ல், கொரோனா ஊரடங்குக்குபின், எந்த பணிமனையிலும் இல்லாத வகையில், 111 சதவீதம் பஸ்களை இயக்கியதற்காக 3வது முறையாக விருது வழங்கப்பட்டது.கடந்த, 2021ல், டீசல் சிக்கனம், பஸ் டயர்களின் ஆயுள் நீட்டிப்பு, கடந்த சட்டசபை தேர்தலன்று, பணினையில் உள்ள ஊழியர்கள் 100 சதவீதம் வாக்களித்ததுடன், 135.8 சதவீதம் பஸ்களை இயக்கியது ஆகிய காரணங்களுக்காக 4வது முறையாக வழங்கப்பட்டது. தற்போது, தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக 5வது முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: