அரசு கல்லூரி, பல்கலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகளை விரைந்து வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 6000க்கும் கூடுதலான ஆசிரியர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வையும், தர ஊதிய உயர்வையும் வழங்க மறுப்பது நியாயம் அல்ல. பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் ஆசிரியர்கள், விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள்,பல்கலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

Related Stories: