திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் : திருச்சியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் தொடர்ந்து கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. திருச்சி சென்னை பை-பாஸ் சாலைகளில் புது வெள்ளை பனி மழை பொழிகிறது என்பது போல் பனி பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக கண்களுக்கு தெரியவில்லை. சாலையும் பணி மூட்டத்தில் மூடிக்கிடப்பதால் சிறிது தூரத்தில் மட்டுமே சாலையும், வழியும் கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால் வாகனத்தில் முப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்க வேண்டி சென்றனர். சில இடங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் சாலைகள் இருந்தது. காலை 8 மணி வரை இந்த பனி பொழிவு இருந்தது. பின்னர் சூரிய ஒளிபட்டதும் பனி துளிகள் காணாமல் சென்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளில் பெய்யாத அளவுக்கு 2021ம் ஆண்டு கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஆண்டு சராசரி மழையளவு 861மிமீ என்றிருக்க கடந்த 2021ல் 56.93சதவீதம் அதிகமாக, அதாவது 1351.18 மிமீ மழை பெய்தது. 2022 ஜனவரி தொடக்கத்தில் மழை பெய்தபோதும், தற்போது முன் இரவில் பனி கொட்டி வருவதோடு, பகலில் ஏப்ரல் மாதம் போல் வெயில் வெலுத்து வாங்குகிறது. இருந்தும் கடந்த சிலதினங்களாக பின்பனி அளவுக்கு அதிகமாக கொட்டி வருகிறது.

இதற்கு முத்தாய்ப்பாக நேற்று முன்தினமும், நேற்றும் (23ம்தேதி) மூடுபனி அளவுக்கு அதிகமாக கொட்டியதால், முழங்கால் மட்டத்திற்கு மேல் எதுவுமே தெரியாமல் புகை மூட்டமாக வயல்களும், சாலைகளும், கிராமங்களும் காணப்பட்டன. காலையில் கிராமங்களில் வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் உற்றுப்பார்த்து உறைந்து போகுமளவுக்கு பனிமூட்டமாக காணப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் 60 கிலோ மீட்டர் தூரமுள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, 35கிலோ மீட்டர் நீளமுள்ள துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, 30 கிலோமீட்டர் நீளமுள்ள அரியலூர் சாலை மற்றும் ஊரக சாலைகள் அனைத்திலும் எதிரே வரும் வாகனங்க ளை சரியாக பார்க்க முடி யாததால் காலை 8 மணி வரைக்கும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற டேங்க்கர் லாரிகள் சாலையை விட்டிறங்கி நிறுத்தி வைக்கப்பட்டு 9 மணிக்கு பிறகே இயக்கப்பட்டன.

Related Stories: