ஜட்ஜ் ஐயா அறையில் பாம்பு: மும்பை ஐகோர்ட்டில் அலறல்

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தின் தரை தளத்தில் உள்ள நீதிபதி அமித் போர்க்கரின் தனி அறையில் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதையறிந்த நீதிமன்ற ஊழியர்கள் அந்த பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் கூறுகையில், ‘நீதிபதியின் அறையில் பதுங்கியிருந்த பாம்பு விஷமுள்ளதா? என்பது தெரியவில்லை. அந்த பாம்பை பிடிப்பதற்காக பாம்பு பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நீதிபதியின் அறையில் இருந்த பாம்பை பிடித்து சென்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த சிலர் தங்களது செல்போனில் புகைப்படங்களை எடுத்தனர். நீதிபதியின் அறையில் பாம்பு பிடித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இம்மாதம் முழுவதும் மும்பை உயர் நீதிமன்றம் காணொலி காட்சி மூலம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால், நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த பாம்பு, நீதிபதியின் அறைக்குள் புகுந்துள்ளது’ என்று அதிர்ச்சியுடன் கூறினார்.

Related Stories: