புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறைக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். இயல்புநிலை திரும்பிய பின்னரே மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.நாட்டின் முதல், `சிறந்த மாவட்ட நிர்வாக குறியீட்டை’ ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காணொலி மூலம் வெளியிட்டு பேசியதாவது: ஜம்மு காஷ்மீரின் மேம்பாட்டிற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார்.