வெறுப்பு பேச்சுக்களை ஆதரிக்கிறது பாஜக : உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் கடும் விமர்சனம்

புதுடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுக்களை பேசுவோர்  விவகாரத்தில் ஆளும் பாஜ கட்சி மௌனம் காப்பது மட்டுமல்லாமல், அவற்றை  ஆதரிக்கவும் செய்கிறது என பிரபல உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன்  பாலி நாரிமன் கடுமையாக விமர்சித்துள்ளார். மும்பையில் சட்டப் பள்ளி தொடக்க விழா ஒன்றில் ஜனவரி 14 அன்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி  நாரிமன் கலந்து கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக ,ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கொண்ட சட்டப்பிரிவு 19  வது பிரிவின் நோக்கத்தை முற்றிலுமாக மீறி,   நகைச்சுவை நடிகர்கள் மற்றும் மாணவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

அதோடு, ஆளும் பாஜகவை விமர்சித்ததற்காக மக்கள் மீது தேச துரோக வழக்குகள் பாய்ந்தபோதிலும்,  உண்மையில் வெறுப்பூட்டும்  பேச்சுக்களை பேசியவர்கள் மற்றும் ஒரு சமூகத்தின் அழிக்க இனப்படுகொலைக்கு  அழைப்பு விடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்புணர்வை  ஏற்படுத்திய பேச்சுக்களுக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் பதிவு  செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை கிட்டத்தட்ட ஒரு மாதமாக  யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: