அதிமுக ஆட்சியில் முடங்கிய தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பெண்கள் வரவேற்பு

சென்னை: அதிமுக ஆட்சியில் நிதிப்பற்றாக்குறையை காரணமாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவங்கி பெண்களுக்கு தங்கம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் மனதார நன்றி தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த 2018ஆம் ஆண்டு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்திருந்தனர். ஆனால் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்தை முடக்கி வைத்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் துவக்கி கட்சி பாகுபாடின்றி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் துவக்க காத்திருக்கும் பெண்களுக்கு தங்கம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் மனதார நன்றி தெரிவித்தனர்.

Related Stories: