நாட்டில் முதன் முறையாக குடியரசு தினவிழாவுக்கு முன்கள, துப்பரவு தொழிலாளர்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு அழைப்பு: பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் முதன்முறையாக குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆட்டோ டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: ‘குடியரசு தினவிழா கொண்டாட்டம் டெல்லி ராஜ்பாத்தில் ஜன.26ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவில்லை. மேலும், 8 ஆயிரம் பார்வையாளர்ளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக, ஆட்டோ டிரைவர்கள், துப்புரவாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடியின் உத்தரவுப்படி குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.

கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு

டெல்லியில் குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு ெடல்லி திரிலோக்புரி மெட்ரோ மேம்பால தூண் கீழே இரண்டு பைகள் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்தனர். வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் படையினர் வரவழைக்கப்பட்டு, பைகளை மீட்டு பரிசோதனை நடத்தினர். ஆனால், அதில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் இல்லை. லேப்டாப் மற்றும் மொபைல் சில ஆவணங்கள் இருந்துள்ளன. கடந்த வாரம் டெல்லி காஜிபூர் மலர் மார்க்கெட்டில் ஆர்டிஎக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் அடங்கிய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: