கோட்டயம் அருகே கொடுமை; பள்ளி மாணவி பஸ்சில் பலாத்காரம்: கண்டக்டர், டிரைவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே பஸ்சில் வைத்து பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கண்டக்டரும், அவருக்கு உதவிய டிரைவரும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியை சேர்ந்தவர் முகம்மது அப்சல் (31). தனியார் பஸ் கண்டக்டர். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இடுக்கி மாவட்டம் கட்டப்பனை சேர்ந்தவர் எபின் (35) டிரைவாக உள்ளார். இந்த பஸ்சில் பாலா பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

அப்போது மாணவிக்கும், அப்சலுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. திருமணமாகவில்லை என்று கூறி மாணவியை காதலிப்பது போல் நடித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாணவியை பாலா பஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளார். மாணவியும் மதியம் பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு வந்தார். இதனிடையே அப்சல் பயணிகள் இல்லை என்று கூறிவிட்டு ஒரு ட்ரிப்பை கட் செய்தார். ெதாடர்ந்து பஸ்சை பேருந்து நிலையத்தின் ஒதுக்குபுறமாக நிறுத்தினார்.

பின்னர் மாணவி வந்ததும் பஸ்சின் படிக்கட்டு வாசல், ஜன்னல்களை முடிவிட்டார். அதன் பிறகு மாணவியை பஸ்சிற்குள் வைத்து பலாத்காரம் செய்து உள்ளார். இந்த தகவல் பாலா டிஎஸ்பி ஷாஜு ஜோசுக்கு தெரியவரவே சம்பவம் இடம் விரைந்தனர். பின்னர் பஸ்சின் கதவை திறந்து உள்ளே புகுந்து மாணவியை மீட்டு அப்சலை கைது செய்தார். இவருக்கு உடந்தையாக இருந்த டிரைவர் எபினையும் கைது செய்தார். பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கோட்டயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: