விவசாயிகளை சமாதானப்படுத்த பட்ஜெட்டில் உர மானியத்துக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு?

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் ஒன்றிய அரசு மானியம் ஒதுக்கீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த மாதம் ஒன்றிய அரசு 2022-2023ம் நிதியாண்டுக்காக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்காக அரசு மானியம் ஒதுக்கீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. உர நிறுவனங்கள் சந்தை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு உரத்தை விற்பனை செய்ததற்காக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.1.4லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இது ரூ.1.3 லட்சம் கோடியாக இருந்த நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து ஆலோசனை நடந்து கொண்டு இருப்பதாகவும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Related Stories: