மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிராமச்சந்திரனின் 105வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மறைந்த எம்ஜிஆரை நினைவு கூர்ந்தனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘பாரத ரத்னா எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூருகிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாக போற்றப்படுகின்றார். அவரது திட்டங்கள் ஏழைகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகின்றது’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: