காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையில் ₹12 கோடி பரிசு : கோடீஸ்வரரான பெயின்ட் தொழிலாளி

திருவனந்தபுரம் :  கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதன் முதல் பரிசு ₹ 12 கோடி. டிக்கெட் விலை ₹ 300. முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஒரு சில வாரங்களிலேயே அனைத்தும் விற்பனையானது.      இதையடுத்து, மேலும் 9 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. அதுவும் விற்பனையானதை தொடர்ந்து கூடுதலாக 8.34 லட்சம் டிக்கெட்டுகள்  அச்சடிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த லாட்டரி குலுக்கல் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடந்தது. முதல் பரிசு  ₹12 கோடி XG 218582 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு கிடைத்தது. இந்த லாட்டரி கோட்டயம் மாவட்டத்தில் விற்பனையானது தெரிய வந்தது. அதை வாங்கிய அதிர்ஷ்டசாலி கோட்டயம் ஐமனம் என்ற பகுதியை சேர்ந்த சதானந்தன் என தெரிய வந்துள்ளது.

 பெயின்டிங் தொழிலாளியான இவர் நேற்று காலைதான் இந்த டிக்கெட்டை அருகில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார். காலையில் வாங்கிய டிக்கெட்டுக்கு மாலையில் இவருக்கு ₹12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. சதானந்தனுக்கு ராஜம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Related Stories: