ஏப்.1ல் சிரஞ்சீவி படம் ரிலீஸ்

சென்னை : இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் சினிமா  தியேட்டர்கள் இயங்குவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வருவதில் பலத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் கொரட்டாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம், ‘ஆச்சார்யா’. மணிசர்மா இசை அமைத்துள்ளார். இப்படம்  வரும் பிப்ரவரி 4ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகைக்கு இப்படம் வெளியாகிறது.

Related Stories: