கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

ஆனைமலை :  கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வன சரகத்திலுள்ள கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு  யானைகள்  முகாமுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டகாசம் செய்து வந்த அசோக் என்ற யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இந்த 12 வயது யானைக்கு பாகனாக கோழிகமுத்தி மலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (45) மற்றும் முருகன் ஆகியோர் இருந்தனர்.

நேற்று காலை  யானையை மேய்ச்சலுக்காக ஆறுமுகமும், முருகனும் வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது  திடீரென யானை முருகனை தாக்கியது. அதை பார்த்த ஆறுமுகம் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் யானை தாக்கியது. இதில் ஆறுமுகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வனத்துறையினர் வந்து ஆறுமுகத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: