கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு

சென்னை : தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க அரசு  பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வழிபாட்டு தலங்களுக்கு வார இறுதி நாட்களான  வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தின் 175வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தேவாலய போதகர் ரெவரன்ட் மார்ட்டின் பிலீப் மற்றும் பலர் மீது, கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டம் 143, 188, 239 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: