பாகாயம் போலீசார் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி-ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்

வேலூர் : வேலூர் பாகாயம் போலீசார் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடந்த பைக் பேரணியை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கியது. கடைகள், மார்க்கெட்கள் அடைக்கப்பட்டது. பொதுமக்கள் அத்தியாவசியான பணிகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக காண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் பாகாயம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு பைக் பேரணி நேற்று நடந்தது. இந்த பேரணியை ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சுபா வரவேற்றார். சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உட்பட 30க்கு மேற்பட்ட எஸ்ஐகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பைக் பேரணி பாகாயத்தில் தொடங்கி ஓட்டேரி, சங்கரன் பாளையம், தொரப்பாடியில் நிறைவு பெற்றது. பேரணியின் போது சைரன் ஒலித்தப்படி சென்றனர்.

Related Stories: