மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகம் அறிவு தாகம் தீர்க்கும்: முதல்வர் அறிவிப்புக்கு குவிகிறது பாராட்டு

மதுரை: மதுரையில் கலைஞர் நினைவு நூலக அறிவிப்புக்கு மதுரை எம்பி, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளதாவது: சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் முதல்வர் அறிவிப்பு, மதுரைக்கு மற்றுமொரு மகுடம். பல்லாண்டு கோரிக்கை நிறைவேறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, முதல்வருக்கு நன்றி. பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா கூறியதாவது: தமிழ் புலவர்களின் இருப்பிடமாக இருந்த மதுரையில் நூலகம் அமைப்பது சிறப்பாகும். சென்னையில் அண்ணா பெயரில் கட்டிய நூலகத்தில் படித்த பிள்ளைகள், பலரும் அரசு பணிக்கு செல்ல வாய்ப்பாக இருந்தது. அதேபோல் மதுரையில் கட்டப்படும் நூலகமும் அரசுப்பணிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக உதவும். இதற்காக. தமிழர் ஒவ்வொருவரின் நன்றிகளும், வாழ்த்துகளும் முதல்வருக்கு உரித்தாகட்டும். இதேபோல் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் பலரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்….

The post மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகம் அறிவு தாகம் தீர்க்கும்: முதல்வர் அறிவிப்புக்கு குவிகிறது பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: