பெரம்பலூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி

பாடாலூர்:  பாடாலூர் அருகே ஆம்னி பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரம்பலூர்மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை இருந்து சென்னைக்கு சென்ற இந்த ஆம்னி பஸ்ஸை கன்னியாகுமரி மாவட்டம் வாவரை பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் அமர்நாத் (36) டிரைவராக ஓட்டி சென்றார்.

அப்போது பாடாலூர் தனியார் பள்ளி அருகே ஆம்னி பஸ் வந்த போது, மேம்பாலம் பணிக்காக பணிக்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து பாய்ந்தது. சம்பவ இடத்திலே பஸ்ஸில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மருதங்கோடு சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின் மோன் (25) பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் காயம் அடைந்த 8 பேர் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே அதிகாலை ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: