காரை தந்தத்தால் குத்தி தாக்கிய காட்டு யானை” உயிர் தப்பிய பயணிகள்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் இருந்து நேற்று காலை கூடலூர் நோக்கி கார் ஒன்று வந்தது. இந்த கார் பிதர்காடு வனச்சரகம் நெலாக்கோட்டை பகுதியில் வந்த போது காட்டு யானை ஒன்று சாலையில் குறுக்கிட்டது. ஆக்ரோஷமாக வந்த யானையை பார்த்து ஓட்டுநர் காரை திருப்ப முயன்றார். அப்போது, திடீரென யானை காரை தனது தந்தத்தால் குத்தி சேதம் செய்தது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தமிட்டதும் யானை அங்கிருந்து திரும்பி சென்றது. இதில் காரை ஓட்டி வந்த கூடலூர் அருகே அத்திப்பள்ளியை சேர்ந்த டிரைவர் சண்ணி (60) உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்த அப்பகுதி மக்கள் சுல்தான் பத்தேரியில் இருந்து கூடலூர் செல்லும் சாலை நெலாக்கோட்டை ஸ்கூல் ஜங்சன் பகுதியில் அரை மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், ஏடிஎஸ்பி சௌந்தரராஜ் வனத்துறையினர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

The post காரை தந்தத்தால் குத்தி தாக்கிய காட்டு யானை” உயிர் தப்பிய பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: