2021 கொரோனா பேரிடரிலும் தட்கல் டிக்கெட் மூலம் ரூ.500 கோடி வருமானம்: ரயில்வே தகவல்

புதுடெல்லி: கொரோனா பேரிடர் காலமான 2020-21ம் ஆண்டில் தட்கல், பிரீமியம் தட்கல் முன்பதிவு கட்டணங்கள் மூலம் இந்திய ரயில்வே ரூ.500 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய ரயில்வேயிடம் இருந்து பதில் பெற்றுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று ஆண்டான 2020-21ல் தட்கல் டிக்கெட் கட்டணங்கள் மூலம்  ரூ.403 கோடியும், பீரிமியம் தட்கல் டிக்கெட்டுகளின் மூலம் ரூ.119 கோடியும், டைனமிக் கட்டணங்கள் மூலம் ரூ.511 கோடியும் ரயில்வே வருவாய் ஈட்டியுள்ளது. இந்த மூன்று வகை முன்பதிவையும் பொதுவாக கடைசி நிமிடம் ரயிலில் பயணிக்க முடிவு எடுத்தவர்கள் பயன்படுத்தி உள்ளனர். மேலும், அவசரகால பயணத்துக்காக மக்கள் பிரீமியம் கட்டணங்களை செலுத்தியும் சேவைகளை பெற்றுள்ளனர். இதன்மூலம், 2020-21 நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை டைனமிக் கட்டணங்கள் மூலம் ரூ.240 கோடியும், தட்கல் டிக்கெட் மூலம் ரூ.353 கோடியும், பிரீமியம் தட்கல் கட்டணமாக ரூ.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: