கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதியில் ஆட்டுக்கல் தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் அம்மிக்கல், ஆட்டுக்கல், திருவை போன்ற கருங்கல்லினால் ஆன பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். இவர்கள் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து இந்தப் பகுதியில் தற்காலிகமாக தங்கி இவர்களுக்கு தேவையான கருங்கல்களை போக்குவாகனங்களில் கந்தர்வகோட்டை பகுதிக்கு ஏற்றி வந்து ஒழுங்கற்ற நிலையில் உள்ள கருங்கல்களை அழகிய அம்மிக்கல் அதற்கு ஏற்ற குழவியும், ஆட்டுக்கல் அதற்கு ஏற்ற குழவியும், வட்டவடிவில் அன திருவை என்று சொல்லக்கூடிய தானியங்களை கைகளால் அரைக்கும் கல்லினை செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
