மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை எதிர்வரும் 27ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கும் :கர்நாடக முதல்வர் உறுதி

பெங்களூரு : மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை எதிர்வரும் 27ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பெலகாவியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த தகவலை பசவராஜ் பொம்மை கூறி இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டுவது எப்போது சுயேச்சை எம்எல்ஏ ஷரத் பச்சே கவுடா கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை விரைவில் கட்டப்படும் என்றார்.

அணை கட்ட ஒன்றிய நீர்வள ஆணையம் முதற்கட்ட அனுமதியை வழங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதலை பெற முயற்சித்து வருவதாகவும் பொம்மை தெரிவித்தார். அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறிய முதல்வர் பொம்மை, 27ம் தேதி இதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். 

Related Stories: