சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்கிற்கு கொரோனா தொற்று

லண்டன்: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக். 24 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். கடந்த வாரம் முபதாலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்க அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன்பின்னர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. கடுமையான காய்ச்சல், தலைவலியால் அவதிப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக, நான் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், சமீபத்தில் கோவிட்-19 சோதனை செய்ததில் பாசிட்டிவ் வந்துள்ளது.

நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். ஏனெனில் நான் மிகவும் கடுமையான அறிகுறிகளை (காய்ச்சல், வலிகள், சளி) அனுபவித்து வருகிறேன். நேரம் சிறப்பாக இல்லை என்றாலும் , ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான எனது  தயாரிப்புகளின் இறுதி கட்டத்தில் இருந்ததால் நான் விடுவிக்கப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை கடந்தவுடன் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வேன், என தெரிவித்துள்ளார். இதேபோல் அபுதாபி சென்று திரும்பிய முன்னணி வீரர் ரபேல் நடாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: