திருச்சி: திருச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அளித்த பேட்டி: இந்து சமய அறநிலைய துறையை கலைக்குமாறு தமிழக பாஜக கூறுவது கண்டிக்கத்தக்கது. பாஜக 60 ஆண்டுகள் இல்லாத வேறுபாட்டை உருவாக்கி இருக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. மதரீதியாக மக்களை பாஜக பிரிக்கிறது. திமுகவில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. அதிமுக வீழ்ச்சியடைந்ததற்கு பாஜகவுடன் உள்ள நெருக்கம் தான் காரணம். தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்த முதல்வருக்கு நன்றி.