உதகை: உதகமண்டலம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் லேசான மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உதகை புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. பிங்கர் போஸ்ட், ஹெல்கில், மஞ்சன கொரை, முத்தொரை பாலாடா, மேல்கவ்வட்டி ஆகிய இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.