வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே துர்நாற்றம் வீசுவதால் ஜேசிபி இயந்திரம் வைத்து சொந்த செலவில் குப்பைகளை அள்ளிய பொதுமக்கள்

வேலூர்: வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் ஜேசிபி இயந்திரம் வைத்து சொந்த செலவில் குப்பைகளை பொதுமக்கள் அள்ளினர். வேலூர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள வழியாக கழனிகாட்டு தெரு மற்றும் அதைசுற்றியுள்ள வீடுகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறமும் ரயில்வே துறைக்கு சொந்தமான இடமும், மற்றொருபுறமும் தனியாருக்கு சொந்தமான இடமும் உள்ளது. இந்த இடங்களில் கோழிக்கழிவுகள், மருந்து கழிவுகள், குப்பைகள் மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசிவருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்றும் சேர்ந்து தங்களது சொந்த பணத்தில் ஜேசிபி இயந்திரம் வைத்து குப்பைகளை நேற்று அள்ளினர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் பயன்படுத்தும் வழியிலேயே குப்பைகள் கழிவுகள் கொட்டுவதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எங்கள் சொந்த செலவில் குப்பைகளை அள்ளி இருக்கிறோம். இந்த பகுதியில் குப்பைகளை கொட்டும் நபர்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

Related Stories: