படப்பிடிப்பில் இருந்து நள்ளிரவில் மீரா மிதுன் ஓட்டம்

சென்னை: அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நடிகை மீரா மிதுன். ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் பேய காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அங்கு அவரை தேடி வந்த 6 நண்பர்களுடன் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாகி விட்டாராம். இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் கூறியதாவது: 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் இதர 20 சதவீதம்  படப்பிடிப்பு எடுக்க வேண்டி இருந்தது. நாயகி மீரா மிதுன் ஜெயிலில் இருந்து வந்தவுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் கடந்த வாரம் நடத்த திட்டமிட்டு படக்குழுவுடன் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.  மீரா மிதுன் மற்றும் இதர கலைஞர்கள் நடிக்க படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுக்கொண்டிருந்தது படப்பிடிப்பு முழுவதும் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீரென நடிகை  மீரா மிதுன் தன்னை தேடி வந்த 6 நண்பர்களுடன் நள்ளிரவில் அங்கிருந்து ஓடிவிட்டார். மறுநாள் காலையில் இயக்குனரிடம் மானேஜர் விஷயத்தை சொல்ல மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் மூழ்கினோம். இப்போது அவர் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கிறோம் என்றார்.

Related Stories: