ரஷ்ய கலைஞர் கை வண்ணத்தில் மிளிரும் உலோக சிலைகள்: 4 ஆண்டுகளில் 600 சிற்பங்கள் வடிவமைத்து விற்பனை!!!

மாஸ்கோ: ரஷ்யாவைச் சேர்ந்த வடிவியலாளர் ஒருவர் நவீன முறையில் உருவாக்கும் முப்பரிமாண சிற்பங்களுக்கு உலக நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஆண்ட்ரிக் கசர்சோ என்ற அவர் வாடிக்கையாளர்கள் விரும்பும் உருவங்களை முப்பரிமாண சிற்பங்களை நுணுக்கத்தோடு உருவாக்குகிறார். சிங்கம், நாய், கரடி போன்றவற்றின் முப்பரிமாண உருவங்களை பின்னணியில் உள்ள ஒலிக்கலவின் துல்லிய கணக்கோடு அவர் வடிவமைக்கிறார். சிலர் தங்களது செல்ல பிராணிகளின் பிரதிகளை சிற்பங்களாக செய்து வாங்கிச் செல்கின்றனர்.

கண்ணாடி போன்ற பளபளப்புக்காக சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எகினால் ஆனா சிற்பங்களை ஆண்ட்ரிக் உருவாக்குகிறார். 4 ஆண்டுகளில் 50 மாதிரிகள் மூலம் 600 சிற்பங்களை அவர் வடிவமைத்து இருக்கிறார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஈராக், சவுதி அரேபியா, முராகோ, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள கலை ஆர்வலர்கள் இந்த சிற்பங்களை வாங்கியுள்ளனர்.

Related Stories: