இன்று கேத்ரினா - விக்கி திருமணம் வேடிக்கை பார்க்க சென்ற மக்கள் விரட்டியடிப்பு

மாதோபூர்: ராஜஸ்தான் மாநிலம் மாதோபூர் மாவட்டம் பர்வாரா கிராமத்தில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ்சஸ் கோட்டையில் பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் - விக்கி கவுசல் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது. வௌிநாடு, உள்நாட்டில் உள்ள பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜஸ்தான் வந்து கொண்டுள்ளனர். ஆனால், பாலிவுட் பிரபலங்களின் திருமணம் தங்களது கிராமத்தில் நடப்பதை பார்த்து அந்த கிராம மக்கள் ஒருபக்கம் சந்தோஷம் அடைந்தாலும் கூட, மற்றொரு பக்கம் கடும் கோபத்தில் உள்ளனர். இதுகுறித்து வார்டு உறுப்பினர் சாதம் லஹோரி கூறுகையில், ‘பாலிவுட் நடிகர் - நடிகை திருமணம் என்பதால், எங்கள் கிராம மக்கள் பிரபலங்களை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.  ஆனால், அவர்களை சந்திப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல முடியவில்லை. கோட்டைக்கு அருகே சென்றால், அங்குள்ள காவலர்கள் மக்களை விரட்டியடிக்கின்றனர்’ என்றார்.

Related Stories:

More