பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்க்கான அமைச்சரவை குழுவின் கூட்டம்: ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பிற்க்கான அமைச்சரவை குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவத்தினர் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், மேலும் பிபின் ராவத் மிக முக்கிய பதவியில் இருந்ததால் அவரது இடத்தில் யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

More