உ.பி: கோரக்பூரில் ரூ.1,000 கோடியில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

உ.பி: கோரக்பூரில் ரூ.1,000 கோடியில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜூலை 2016ல் அடிக்கல் நாட்டிய நிலையில் 750 படுக்கைகளுடன் கோரக்பூர் எய்ம்ஸ் கட்டப்பட்டுள்ளது. தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அதிநவீன வசதிகள் எய்ம்ஸில் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை உள்பட ரூ.9,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.8,600 கோடியில் புனரமைக்கப்பட்ட யூரியா உர தயாரிப்பு ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். புனரமைப்பட்ட உர ஆலையில் ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு யூரியா உற்பத்தி செய்ய இயலும்.

Related Stories: