சபரிமலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்தில் 10,000 பக்தர்கள் சாமி தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல பூஜை வரும் 26ம் தேதி நிறைவடைய இருப்பதால் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். சுமார் 3 மணி நேரத்தில் 10,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வரும் 26ம் தேதி நடை அடைக்கப்பட உள்ள நிலையில், காலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி சபரிமலை, சரங்கொத்தி, மரக்கோட்டம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கேரள கமாண்டோ படையினர் வனத்துறையினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பாண்டி, தாவளம், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தரிசனத்திற்காக 40,460 பேர் முன்பதிவு செய்த நிலையில், மழையும் பொருட்படுத்தாது காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Stories:

More