ஆபாச காட்சிகளால் ஓடிடியில் வெளியாகும் தீபிகா படம்

மும்பை: இயக்குநர் ஷாகுன் பத்ரா இயக்கத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. சமீபத்தில் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்துள்ளனர். படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால் பல காட்சிகளை வெட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு இயக்குனர் ஷாகுன் பத்ரா ஒப்புக்கொள்ளவில்லையாம். படத்தின் கதைக்கு இந்த காட்சிகள் அவசியம். அதேபோல், வசனங்களையும் வெட்ட முடியாது என அவர் கூறி வருகிறார். இதனால் தியேட்டர்களுக்கு பதிலாக படத்தை ஓடிடியில் வெளியிட்டு விடலாம் என அவர் நினைக்கிறாராம். ஓடிடியில் சென்சார் பிரச்னை இல்லை என்பதால் இது தொடர்பாக சில ஓடிடி நிறுவனங்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

Related Stories:

More