எல்லையில் பிறந்த அழகான ஆண் குழந்தைக்கு ‘பார்டர்’ என பெயர் சூட்டிய பாக். தம்பதி

புதுடெல்லி: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரஜன்பூர் மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள புனித தலங்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முயன்றுள்ளனர். ஆனால் இந்தியா- பாகிஸ்தானின் எல்லையான அட்டாரியில், போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகின்றது. இதன் காரணமாக கடந்த 70 நாட்களாக இவர்கள் அட்டாரி எல்லையில் தங்கியிருக்கின்றனர். இவர்களில் 47 பேர் சிறுவர்கள். அவர்களில் 6 பேர் இந்தியாவில் பிறந்தவர்கள். ஒரு வயது நிறைவடையாதவர்கள்.  

இந்நிலையில், எல்லையில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களில் ஒருவரான பாலம் ராமின் மனைவி நிம்பு பாய் நிறைமாக கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கதறி துடித்த நிலையில் அந்த பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் அவருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அழகான குழந்தை பிறந்துள்ளது. பாலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர் எல்லையில் தங்கியிருந்தபோது தங்களுக்கு குழந்தை பிறந்ததால் அக்குழந்தைக்கு ‘பார்டர்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Related Stories: