சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை  ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல கால பூஜைகள் நடந்து வருகிறது. இதையொட்டி  தினமும் ஆன் லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். முதலில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது தினசரி 50  ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்படுகின்றனர். இதன் காரணமாக கடந்த  சில நாட்களாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றுமுன்தினம்  முதலாவதாக 50 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். அவர்கள் சன்னிதானத்தை சுற்றியுள்ள  வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து,  இரவு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் 18ம் படிக்கு படி பூஜை  நடந்தது. இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது, ‘சாமியே... சரணம்  ஐயப்பா...’ என்று கோஷமிட்டபடி வழிபட்டனர். நேற்றும் சபரிமலையில் கட்டுக்கடங்காத  கூட்டம் காணப்பட்டது. அதன்படி, காலை முதலே பக்தர்கள் வருகை அதிகமாக  காணப்பட்டது. மதியத்திற்குள் 45 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து  இருந்தனர். அவர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி  தரிசனம் செய்தனர். இதேபோல் அப்பம், அரவணை வழங்கும் கவுன்டர்களிலும் கூட்டம்  அலைமோதியது.

Related Stories:

More