சென்னையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து கட்சிகளும் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் 7ம் தேதி (நாளை) வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து தேமுதிக சார்பில் நிறைய பேர் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது. மேலும் தேமுதிகவின் வெற்றி வாய்ப்பு, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories: