மணப்பத்தூர் அருகே நெல்விதை பண்ணைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

செந்துறை: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள மணப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட படைவெட்டி குடிக்காடு கிராமத்தில் செந்துறை வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜென்சி ஆய்வு மேற்கொண்டார்.அப்போது விவசாயிகளுக்கு தரமான நெல் சான்று விதைகள் கொள்முதல் செய்து வழங்குவதற்கு செந்துறை வட்டாரத்திற்கு நெல் சான்று விதைப்பண்ணைகள் அமைக்க 8ஹெக்டேர் மற்றும் 20மெ.டன் கொள்முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அக்கிராமத்தில் உள்ள விஸ்வநாதன் என்பவரது வயலில் திருந்திய நெல் சாகுபடி துறையில் அமைக்கப்பட்ட 10ஏக்கர் பரப்பில் CR1009(Sub-1) ஆகிய சான்று நெல் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து விவசாயிகளிடம் விதைப்பண்ணைகளில் களைகள், கலவன்கள் மற்றும் பூச்சிநோய் தாக்குதல்கள் இல்லாமல் நன்கு பராமரிக்க தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது துனை வேளாண்மை அலுவலர் அப்பாவு, உதவி விதை அலுவலர் தமிழ்ச்செல்வன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஒளிச்செல்வி மற்றும் ஆனந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More