'கட்டுனா உன்ன தான் கட்டுவன்': மைசூரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த காதலன்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் காதலியை கரம் பிடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் அருகே ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்கண்ணா என்ற முதியவரும், ஜெயம்மா என்பவரும் இளம் வயதில் காதலித்துள்ளார்கள். ஆனால் ஜெயம்மாவின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஜெயம்மாவை அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 4 ஆண்டுகளில் ஜெயம்மா கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார்.

அதே சமயம் சிக்கண்ணா திருமணமே செய்து கொள்ளாமல் காதலியின் நினைவிலேயே காலத்தை நகர்த்தியுள்ளார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் தங்கள் அன்பை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்கள். இதனை தொடர்ந்து மேல்கோட்டை என்ற இடத்தில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இளம் வயதில் தவறவிட்ட காதலை முதுமையில் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இருவரும் தங்களது இல்லற வாழ்வை தொடங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: