என் மகளை கேலி செய்வதா? நடிகர் அபிஷேக் பச்சன் ஆவேசம்

மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன், முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த மாதம் ஆராத்யாவின் 10வது பிறந்தநாளை அவர்கள் மாலத்தீவில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது எடுத்த சில போட்டோக்களை அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சில நெட்டிசன்கள் ஆராத்யா குறித்து கேலி செய்து கமெண்ட் பதிவிட்டிருந்தனர்.

இதையறிந்த அபிஷேக் பச்சன் ஆவேசமடைந்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசும்போது, ‘சினிமாவில் நான் பிரபலமாக இருப்பதால், என்னைப் பற்றி வரும் விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள், தைரியம் இருந்தால் எனக்கு நேராக வந்து பேசட்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More