சேரில் அமர்ந்து கொண்டு தேசிய கீதம் பாடிய மம்தா: மகாராஷ்டிராவில் சர்ச்சை

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்தார். அதை முடிக்கும் தருவாயில், தேசிய கீதத்தை மம்தாவே இருக்கையில் அமர்ந்து கொண்டு சிலவரிகள் பாடினார். பின்னர் எழுந்து நின்று மேலும் சில வரிகளை மட்டும் பாடிவிட்டு, ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்று கூறி பாதியில் முடித்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா, நாட்டின் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. பாஜ தலைவர்கள் பலரும் அவரை கடுமையாக சாடியுள்ளனர். முதல்வர் மம்தாவிற்கு தேசிய கீதம் தெரியாதா? அல்லது வேண்டுமென்றே அவமதித்தாரா? என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், தேசிய கீதத்தை மம்தா பானர்ஜி அவமதித்து விட்டதாக மும்பை காவல் நிலையத்தில் பாஜ நிர்வாகி  புகார் கொடுத்துள்ளார்.

Related Stories: