கட்ச் வளைகுடாவில் 2 கப்பல்கள் மோதல்: எண்ணெய் கசிவால் ஆபத்து

அகமதாபாத்: கட்ச் வளைகுடா பகுதியில் 2 வர்த்தக கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து குஜராத் மாநிலத்துக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `வர்த்தக கப்பல்களான ஏவியேட்டர், அட்லாண்டிக் கிரேஸ் கட்ச் வளைகுடா பகுதியில் கடந்த 26ம் தேதி இரவு மோதிக் கொண்டன. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து வருகிறது. இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல்கள், மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்கள் தயார் நிலையில் கண்காணித்து வருகின்றன,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More