கடப்பாவில் செம்மரம் வெட்ட சென்று உயிரிழந்த தொழிலாளியின் உடல் அரூர் சித்தேரி அருகே கண்டெடுப்பு?

ஆந்திரா: கடப்பாவில் செம்மரம் வெட்ட சென்று உயிரிழந்த தொழிலாளியின் உடல் அரூர் சித்தேரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளி ராமனா(35) உடலை சித்தேரி மலை கிராமத்துக்கு எடுத்து வந்தது யார் என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கடப்பா நல்லமல்லா வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சுற்றிவளைத்த போது தருமபுரியை சேர்ந்த தொழிலாளி பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தொழிலாளிகள் வேலு, சந்திரன் ஆகியோருக்கு கடப்பா ரீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்றனர். கமல்ஹாசன், சுப்பிரமணி, தீர்த்தமலை, முருகன் ஆகியோர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர்.

Related Stories:

More