வறுமை குறியீடு அறிக்கை வெளியீடு: தமிழகத்தில் 4.89% மட்டுமே ஏழைகள்

புதுடெல்லி: ஐநா மேம்பாட்டு திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிதி ஆயோக் ஆண்டுதோறும் வறுமைக்கோடு குறியீடு அறிக்கையை வெளியிடுகிறது. ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம் வயது இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகைப் பதிவேடு, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிப்பழக்கம், தண்ணீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் போன்ற 12 குறியீடுகளால் இது கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக்கின் வறுமைக் குறியீடு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை நாட்டின் ஏழ்மையான மாநிலங்களாக, முதல் 3 இடங்களில் இடம் பெற்றுள்ளன. வறுமை குறைந்த மாநிலமாக கேரளா உள்ளது.

Related Stories: